புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 டிச., 2015

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம்


கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு வருகைத் தந்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அறிவித்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும், பொலிஸாரின் அறிவித்தலை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்வதாகவும் அவர் கூறினார்.

முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரட்ன விடுதலை செய்யப்பட்டு, இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயற்சிப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.