புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2015

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!


எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, அவர்களின் ஊடாக கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றவர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸ் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு பின் தொடர்ந்து வருகின்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போன்றே அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை வழக்குகளில் சிக்கச் செய்வதே இந்த முயற்சிகளின் பிரதான நோக்கமாகும்.
பல்வேறு நிதி மோசடிகள் குறித்து கைதாகும் அதிகாரிகள் நாமல், கோத்தபாய ஆகியோருக்கு எதிராக தகவல்களை வழங்கத் தவறினால் அவ்வாறானவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சில வர்த்தகர்களுக்கு சொந்தமான சொகுசு வீடுகளை ராஜபக்சக்களுக்கு சொந்தமானவை என கூறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது என பிரசன்ன ரணதுங்க கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

ad

ad