புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2015

கும்மிடிபூண்டி ஈழத்தமிழர் முகாமில் நிவாரணப் பொருட்களை வழங்கிய தொல்.திருமாவளவன்


நேற்று முற்பகல் 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருள்களை வழங்கினார்.
அங்கே உள்ள ஆயிரம் ஈழத்தமிழர் குடும்பத்தினருக்கு தலா 2 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் அடுப்பு, போர்வை, பிரட், பிஸ்கட், சோப், தண்ணீர் பாட்டில், சேமியா, கொசுவத்தி,மெழுகுவத்தி, நேப்கின் ஆகிய பொருட்களை தொல்.திருமாவளவன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் அவர்கள்,
கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மக்கள் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். லட்சகணக்கான மக்கள் இன்று அகதிகளாக மாறி உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தி நிற்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் கும்மிடிபூண்டியில் உள்ள இந்த ஈழத்தமிழர் அகதிகள் முகாம் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 937 குடும்பங்கள் இங்கே வசிக்கின்றனர்.1990லிருந்து இங்கே வசித்து வரும் இந்த மக்களுக்கு நல்ல வீடுகள் இல்லை.
சுமார் 96வீடுகள் கட்டப்பட்டு மூன்றாண்டு காலமாக அவை மக்களுக்கு ஒப்படைக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் கட்டி தந்திருக்கிற கழிப்பறைகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கும்மிடிபூண்டி முகாமிலிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் நிவாரணம் வழங்க விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாடு செய்து இன்றைக்கு மக்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் அடுப்பு, போர்வை, பிரட், பிஸ்கட், சோப், தண்ணீர் பாட்டில், சேமியா, கொசுவத்தி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம்.
தமிழக அரசு இந்த நேரத்திலாவது தமிழகத்தில் எங்கெல்லாம் ஈழத்தமிழர் முகாம்கள் இருக்கின்றனவோ அங்கே கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்கு எப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறதோ அப்படி ஈழத்தமிழர்களையும் கணக்கில் கொண்டு, ஈழத்தமிழ் அகதிகள் முகாமுக்கு நல்ல வீடுகள் கட்டி தரவேண்டும் எனவும் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டார்.

 
 
 
 

ad

ad