புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2015

அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவைகளை ஒதுக்க அந்நாட்டு பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 18ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தலில், அந்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி(SPV) 200 பாராளுமன்ற தொகுதிகளில் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பிற கட்சினரை வியப்பில் ஆழ்த்தியது.
சுவிஸ் அரசாங்கமானது ஒரு ஜனாதிபதி மற்றும் 6 அமைச்சர்களை கொண்டு பாராளுமன்றம் உருவாக்கப்படும். இதில் ஏற்கனவே சுவிஸ் மக்கள் கட்சிக்கு விளையாட்டு மற்றும் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சிக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதனால், தங்களுக்கு இரண்டு அமைச்சரவை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி தலைவரான டோனி புரூனர் வலியுறுத்தி வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கம் உருவாக்குவது தொடர்பாக அமைச்சர்களை தெரிவு செய்யும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சுவிஸ் பாராளுமன்றத்தில் உள்ள மேல்சபை மற்றும் கீழ்சபையில் சுவிஸ் மக்கள் கட்சிக்கு அதிக அளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
எனவே, சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கட்சி சார்பாக 3 பாராளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நடைபெற்று வாக்குப்பதிவில், சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை அளிப்பது என முடிவு செய்யப்பட்டு, அக்கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், வோ மாகாணத்தில் உள்ள Bursins தொகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் அரசில் நிதி அமைச்சராக செயல்பட்ட Widmer-Schlumpf என்பவர் பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது நிதி அமைச்சகம் சுவிஸ் மக்கள் கட்சிக்கு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் எதிரான கொள்கை கொண்டுள்ள சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை கிடைத்துள்ளதால், அகதிகளுக்கு பக்க சார்பான திட்டங்கள் வெளியாகுமா என்பது குறித்தான சந்தேகம் சுவிஸ் அகதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ad

ad