வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர், பேரரசு, வெற்றிமாறன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் வெளியே வந்ததும், எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.