உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். இவர் தனது தாயார் ராஜ் ராணி ஜெயின் மற்றும் மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சந்தீப் ஜெயினின் தாயாரை சங்கீதா கொடூமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வீடியோவில், படுக்கையில் இருக்கும் சந்தீப் ஜெயினின் தாயாரை சங்கீதா செங்கல்லால் சரமாரியாக தாக்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காட்சியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ காட்சியை சந்தீப் ஜெயினே வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி சங்கீதா அவரையும், அவரது தாயாரையும் தொடர்ந்து தாக்கி வந்தது தெரிய வந்தது.
பலமுறை இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தாகவும், அதனாலேயே ரகசிய கேமராவை தன் வீட்டில் பொருத்தியதாகவும் சந்தீப் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவங்கள் கந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. என்னுடைய தாயாரை அவர் எப்போதும்
திட்டிக்கொண்டும் தாக்கிக் கொண்டும் இருக்கிறார். என்னுடைய மனைவியின் இன்னொரு முகத்தை இந்த உலகம் அறிய வேண்டும் என்பற்காகவே நான் சிசிடிவி கேமராவை அம்மாவின் அறையில் பொருத்தினேன் என்றார்.
ராஜ் ராணி ஜெயின் கூறுகையில், என்னுடைய மருமகள் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார். சம்பத்தன்று சமையல் அறையில் இருந்து வந்த என் மருமகள் என்னை தாக்க ஆரம்பித்தார். செங்கல் கற்களால் என்னை அவர் தொடர்ந்து தாக்கினார் என்றார்.
சங்கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.