புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2016

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்


தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கூட்டு எதிர்க்கட்சிக்கு 13 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 72 நிமிடங்கள் இன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், ஆளும் கட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 58 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள காலமே கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இணைந்தால் அதிகமான காலம் ஆளும் தரப்பினருக்கு செல்லும் என அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அதனால் கூட்டு எதிர்க்கட்சிக்கு சரியான காலத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகளில் மேலதிக காலத்தை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இதன்பின்னர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் ஒரு மணித்தியாலம் மேலதிக நேரம் கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad