புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2016

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று  யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது விவசாயம், சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும் மீள்குடியேற்றம் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டன.

எனினும் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இல்லாமையினால் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் எதிர்க்கட்சி சார்பிரல் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad