புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

சம்பியனானது இளவாலை ஹென்றிக்

Hendricks-collage-720x480
19 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கொத்மலை சொக்ஸ் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிபோட்டியில் நடப்புச் சம்பயனாக
இருந்த கொழும்பு சாஹிரா கல்லூரியை இளவாலை புனித ஹென்றிக் கல்லூரி வெற்றி கொண்டு கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி இடம்பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் இருந்தன. புனித ஹென்றிக் கல்லூரி அணியின் பெனடிக் செவியர் என்ற வீரர் தனது அணிக்காக 42வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். முதல் பாதி முடிவடைய சில வினாடிகளுக்கு முன்னர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஹம்மாத் தமது அணிக்கான கோலைப் போட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில், போட்டியின் 62வது நிமிடத்தில் புனித ஹென்றிக் கல்லூரியின் ஞானேஸ்வரன் அந்தோனிராஜ் தனது அணிக்காக 2வது கோலை போட்டார். அந்த கோலைப் போட்டு இன்னும் 5 நிமிடங்களில் மற்றுமொரு வீரரான பெனடிக் அனோஜன் மற்றுமொரு கோலைப் போட புனித ஹென்றிக் கல்லூரி முன்னிலை பெற்றது. போட்டி முடிவின் போது புனித ஹென்றிக் கல்லூரி 3-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றது.
நேற்றைய இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக புனித ஹென்றிக் கல்லூரியின் பெனடிக் அனோஜனும் சிறந்த கோல் காப்பாளராக அணியின் கோல் காப்பாளர் உகன்திஸ்வரன் அமல்ராஜும் தெரிவானர். அதே வேளை 3ம் இடத்துக்காக இடம்பெற்ற போட்டியில் கட்டுநேரிய புனித செபஸ்டியன் கல்லூரியை களுத்துறை ஹொலி க்ரொஸ் கல்லூரி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

ad

ad