புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

நான் கள்ளத்தோணியா? : இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி



வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நேற்றிரவு நடந்தது.  இதில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பேசியதாவது: “ஒரு பத்திரிகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கள்ளத்தோணி வைகோ என்று கூறியுள்ளார். இங்கே நான் அவருக்கு பதில் கூற வந்துள்ளேன். 2004-லோக்சபா தேர்தலில், என்னை பிரச்சாரத்துக்கு, கோபிக்கு அழைத்தீர்களே...? அப்போது நான் கள்ளத்தோணி என்பது தெரியவில்லையா...? நான் நேரடியாக உங்களை கேட்கிறேன். எந்த அடிப்படையில் நீங்கள் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தீர்கள். சுயமரியாதையும், மானமும், ரோஷமும் காங்கிரஸ்காரர்களுக்கு என்றுமே கிடையாதா...?

எந்த அடிப்படையில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தீர்கள், என்பதற்கு மக்களுக்கு நீங்கள் விளக்கம் தர வேண்டும். அ.தி.மு.க.,வினர் பட்ட பகல் கொள்ளைக்காரர்கள். தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், 2,422 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஒரு கல்வியாண்டில், சமஸ்கிருத மொழியை, மூன்றாவது மொழியாக திணிக்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதைவிட அக்கிரமம் எதுவும் இருக்க முடியாது. நான் நேற்று வரை அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. கோபியில் இருந்து, 15 லட்சம் அரசு ஊழியர்களை கேட்கிறேன். உங்களை ஏமாற்றியது ஜெ. அரசு. உங்களை வஞ்சித்தது கருணாநிதி அரசு என்பதை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். உங்கள் கோரிக்கைகளை பாரபட்சமின்றி தீர்த்து தருகிறோம்” என அவர் பேசினார்.

ad

ad