புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

கைது நடவடிக்கை இல்லை என்று உறுதியளித்ததால் நேரில் ஆஜர் ஆனார் சிம்பு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.   பெண்களை இழிவுபடுத்தி பாடல் பாடியதாக பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில்  அது காவல்துறையினரிடம் விளக்கம் அளிக்க  நேரில் ஆஜர் ஆனார்.

சிம்பு நேரில் ஆஜர் ஆவதையொட்டி ஏராளமானோர் திரண்டிருந்தனர்.  ‘எஸ்.டி.ஆர்., எஸ்.டி.ஆர்.’ என்று சிம்பு ரசிகர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். காவல்நிலையத்திற்கு உள்ளே சென்று விளக்கம் அளித்த பின்னர் வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’போலீசார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தேன்.  எந்தப் பிரச்சனையுமில்லை’’ என்று கூறினார்.

முன்னதாக நேற்றைய தினம் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கோவை சென்றார். அவர் சம்பந்தப்பட்ட காட்டூர் காவல் நிலைய ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் குறித்து முழு விளக்கத்தையும் தந்தார்.  சிம்பு நேரில் ஆஜர் ஆனால் கைது நடவடிக்கை இருக்குமா? என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.  அதற்கு, காவல் ஆய்வாளர், கைது நடவடிக்கை எல்லாம் இருக்காது.  

புகார் குறித்து விளக்கம் அளித்துவிட்டு, அதை எழுத்துமூலமாகவும் தெரிவிக்க வேண்டும். மற்ற படி ஒன்றுமில்லை என்று தெரிவித்தபின்னர்தான், ராஜேந்தருக்கு நிம்மதி வந்தது.  

இதையடுத்து சிம்பை நேரில் ஆஜர் படுத்த சம்மதித்தார் ராஜேந்தர்.  அதன்படி இன்று காலை முதற் கொண்டே காவல்நிலையத்திற்கு அருகில் காத்திருந்தார் சிம்பு. ஆய்வாளர் சொன்ன நேரத் தில் ஆஜர் ஆனார்.

ad

ad