புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

28 ஆம் திகதி வாக்கெடுப்பை எதிர்க்கும் சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சி (PHTOS & VIDEO)

சுவிற்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி அது தொடர்பான விரிவான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சொலத்தூர்ண் மாநிலத் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சொலத்தூர்ண் நகரில் கடந்த சனி மாலை இடம்பெற்றது.
படங்களை பார்க்க இங்கே அழுத்துங்கள்
சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரக் குழு உறுப்பினர் சிறி இராசமாணிக்கம், கண்ணதாசன், சுதாஹரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியா ஹெல்ம், சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஓல்ரன் நகர முகாமையாளர் பிறிஜற் கிஸ்லிங், சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரப் பிரிவின் பிரதித் தலைவி பிரான்சுவா பாசன்ட், சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான தர்சிக்கா கிருஸ்ணானந்தம், நிலா மாணிக்கவாசகர், மதுரன் பூபாலபிள்ளை, ஊடகவியலாளர் சண் தவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
உத்தேச சட்டமூலத்தைத் தோற்கடிக்கும் அதேவேளை, அதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணைந்து குரல் கொடுப்பதற்கான
உறுதிப்பாட்டையும் நிகழ்வில் கலந்து கொண்டோர் வெளிப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.நன்றி கதிரவன்


ad

ad