புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2016

முதல்வராக துடிக்கும் தாத்தா..அழிந்து போகும் தேமுதிக! நிர்மலா பெரியசாமி பரபரப்பு பேச்சு



விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் எம்.ஜி.ஆர் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்தது.
கருப்பு எம்.ஜி.ஆர் என விஜயகாந்தை வர்ணிக்கிறார்கள். தங்களுடைய கட்சிக்கு செல்வாக்கு உயரக்கூட எங்கள் தலைவரைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி அவரை அதிமுகவை தவிர வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது.
அந்த மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி, அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார்.
தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது.
தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும். ஓட்டுக்காக திட்டங்கள் கொண்டுவராமல், தமிழகத்திற்காக தொலை நோக்கு பார்வையில் அம்மா உணவகம், அன்னதானத் திட்டம், குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம்.
விஜயகாந்த் அல்சேமர் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் பேச வந்ததை 5 நிமிடங்களுக்கு மேல் மறந்துபோவார், அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது.
அப்படிப்பட்டவரை மேடையில் ஏற்றி, கணவர் ஒண்ணும் இல்லை. நான்தான் இனி எல்லாம் என விளம்பரம் தேடி வருகிறார் பிரேமலதா. மேலும், விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம்.
விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்.
இவர்களோடு பாமக, மதிமுக, தேமுதிக நமக்கு எதிராக களம் இறங்குறாங்களாம், இந்த பம்பரம், மாம்பலம், முரசு சின்னம் எல்லாம் கிடைக்க, அவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்க யார் காரணம், எங்க முதல்வரம்மாதான் காரணம்.
ஒரு குடிகாரர் எதிர்க்கட்சி தலைவராக எங்க கட்சி தொண்டர்கள் உழைப்புதான் காரணம்.
சென்னை கொளத்தூர் தொகுதியில், 2004 தபால் ஓட்டில் ஜெயித்த ஸ்டாலின் எல்லாம் இங்கு அம்மாவை விமர்சனம் செய்கிறார்.
அவங்க அப்பா கருணாநிதி அடுத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறார். உங்கள் கனவுகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டுவார்கள்.
தமிழகத்தை காக்க சபதம் ஏற்போம். எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என பேசியுள்ளார்.

ad

ad