புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 பிப்., 2016

பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனைவேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக சோதனை செய்யப்பட்டது. பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான மருந்து மாத்திரைகளை பேரறிவாளன் சாப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

வேலூர் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ஜெயிலில் இருந்து பேரறிவாளனை அடுக்கம் பாறை ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

உடல் நலக்குறைவாக இருக்கும் தனது தந்தையை பார்க்க பரோல் கேட்டு பேரறிவாளன் மனு கொடுத்துள்ளார். விரைவில் பரோல் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருப்பதாக அவரை சந்தித்தவர்கள் தெரிவித்தனர்.