புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 பிப்., 2016

அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்கள்: காரணம் என்ன?


அதிமுகவில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், அவர் வகித்து வந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பழனி நகர கழக செயலராக வி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி செயலர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.அசோக் எம்எல்ஏ அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மீனவர் பிரிவு துணைச் செயலராக இருக்கும் டி.ரமேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் தலைமை செயலக வட்டாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் அண்மையில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேனியில் உள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கடந்த ஒரு வாரமாக தேர்தல் சீட்டுக்காக கூட்டம் அலைமோதி வருகிறது.
இதையறிந்தே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார் என கூறப்படுகிறது.