புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2016

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் -6ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் டெல்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். மார்ச் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

இதை தொடர்ந்து மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம். தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad