புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 பிப்., 2016

Kunalan Karunagaran Gnanadas Kasinathar ஞானம் அண்ணா நீங்கள் புங்குடுதீவினை சேர்ந்தவராக இல்லாவிடினும் புங்குடுதீவின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டிப்பவர் . அதற்கு முதலில் தலைவணங்கிக்கொள்கிறேன் + இந்த புங்குடுதீவு உலக மையம் எனும் அமைப்பினை உருவாக்குதல் குறித்து இந்த வாரம் முழுவதும் முகநூலில் ஒரு குழுவினை உருவாக்கி அதிலே அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி அதனை நிரந்தரமாக செயற்படுவதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் - அவர்களில் ஒருவர் யுத்த காலத்தில் தனிமனித முயற்சியில் புங்குடுதீவில் இலவச கல்வி நிலையத்தினை திறம்பட செயற்படுத்திக்காட்டியவர் , அந்த இளைஞர் எங்கே தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என புங்குடுதீவில் இயங்கும் ஓர் நிறுவனம் எண்ணியது , ஆகவே அவரை ஒரேயடியாக நசுக்க எண்ணியது , அதிலே வெற்றியும் கண்டது . ஆம் ஈபிடீபி ஒட்டுக்குழுவுடன் இணைந்து அவர் கல்வி நிலையம் நடாத்தும் பெயரில் புலிகளுக்கு கிளைமோர் தயாரிப்பதாக போட்டுக்கொடுத்து அவரை பூசாவில் இரண்டு வருடம் போட்டனர் - வெளியே வந்த பின்னரும் இடைஞ்சல் கொடுத்தனர் - வெறுத்துப்போன அவர் வெளிநாடு சென்றுவிட்டார் . பல வருடங்கள் பொறுமை காத்தனர் அவரும் அவரோடு இணைந்தவர்களும் . வித்தியா கொலைச்சம்பவத்தின் பின்னர் இனிமேலும் பொறுமை காக்க முடியாது , எமது ஊரினை நாமே பாது காக்கவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர் .