புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2016

வடமாகாண சபையில் கடுமையான வாய்த்தர்க்கம்! முதல்வருக்கு எதிராகவும் சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்து மோதல்


வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தீர்மானம் தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபையின் 46வது அமர்விலும் தொடர்ந்தது.
ஆளுங்கட்சியினருக்கிடையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டதுடன், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராகவும்,
மற்றொரு பகுதியினர் முதலமைச்சர், அமைச்சருக்கு சார்பாகவும் நின்று ஒருவர் மீது ஒருவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்து மோதிக்கொண்ட நிலையில், 2 மணி நேரத்தின் பின்னர் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறிய கருத்தையடுத்து வாய்த்தர்க்கம் ஒருவாறாக முடிந்தது.
வடமாகாண சபையின் 46வது அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது கடந்த 45ம் அமர்வில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நிறைவேற்றப்பட்ட குற்றச்சாட்டு தீர்மானம் தனிப்பட்ட முறையில் ஐங்கரநேசன் மீது சேறுபூசும் நடவடிக்கை என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
குறித்த தீர்மானத்திற்கான குற்றச்சாட்டு பிரேரணை, 
சபை குறிப்பில் முன்னதாக இடம்பெறவில்லை,
உறுப்பினர்களுக்கும், அமைச்சருக்கும் முன்னதாக தெரியப்படுத்தப்படவில்லை.
சிறப்புரிமை, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை என சுட்டிக்காட்டி கொண்டுவரப்பட்டபோதும், அதில் பொது முக்கியத்துவம், சிறப்புரிமை இல்லை
பிரேரணை திடீரென சபைக்குள் நுழைக்கப்பட்டமை. 
உறுப்பினர்களுக்கும், அமைச்சருக்கும் கருத்துக்களை கூற இடம்கொடுக்காமை.
அவை தலைவர் பக்கச்சார்பாக நடந்து கொண்டமை.
உள்ளிட்ட விடயங்களால் இந்த குற்றச்சாட்டு தீர்மானம் சட்டத்திற்கும், நடைமுறைக்கும் முரணான து என்பதுடன் பிழையான, கரவான கண்டனத்திற்குரிய தீர்மானம் என முதலமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் சயந்தன் எழுந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மகன் யோஷித ராஜபக்ஷவுக்காக சட்டத்தரணியாக மாறியதைப்போன்று இப்போது விவசாய அமைச்சருக்காக முதலமைச்சர் சட்டத்தரணியாக மாறிவிட்டாரா? என கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உ றுப்பினர்களான அஸ்மின், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, ஜீ.ரி.லிங்கநாதன் ஆகிய உறுப்பினர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆளுங்கட்சி உறுப் பினர் சிவாஜிலிங்கம், பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் ஆகியோர் நடுநிலமையாக கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் திருமதி அனந்தி சசிதரன், பசுபதிப்பிள்ளை, சிவநேசன், சர்வேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் ஆகியோர் முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் சார்பான நிலைப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்தனர்.
இரு தர ப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மோதிக் கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான பிரேரணையினை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் விசாரிக்கவேண்டும். எனவும்,
அல்லாதுபோனால் தாம் இந்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் கூறியதுடன்,
விசாரித்து தன்மீது பிழை இருந்தால் தாம் பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவோம் எனவும் கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் ஐங்கரநேசன் எழுந்து 4 கோடி அல்ல 400ரூபா கூட தாம் ஊழல் செய்யவில்லை. அதனை நிரூபிக்க எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த 45ம் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அடிப்படையில் ஐங்கரநேசனிடம் விசாரித்து விடயங்களை பெற்றுள்ளதாகவும், மேலதிகமாக இங்கே சில உறுப்பினர்கள் தங்களிடம் ஆவணங்கள் உள்ளதாக கூறும் நிலையில்,
அவ்வாறான ஆவணங்கள் இருப்பின் எங்களிடம் தாருங்கள் அதுவும் விசாரிக்கப்படும். என குறிப்பிட்டதுடன், சேறுபூசும் நடவடிக்கைகள் வேண்டாம். என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த கருத்து மோதலின் நிறைவில் பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது அபத்தமானது என கூறியதுடன்,
கடந்த 1ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் மனைவியின் சுகயீனத்தினால் தாம் மிகுந்த வேலைப்பழுவில் இருந் ததாக கூறியதுடன், தம்மீது குற்றம் சுமத்துவது அபத்தம் எனவும் கூறினார்.
தொடர்ந்து அன்றைய தினம் லிங்கநாதன் தன்னுடைய மாவட்டம் சார்ந்து கருத்து தெரிவிக்க கேட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த விடயம் சபையில் பேசப்பட்டது. பின்னர் எல்லோரும் இங் கே விவாதம் நடத்தினீர்கள். எனவே என்மீது தனியே பழிபோடவேண்டாம்.
மேலும் நேற்று அமெரிக்க துணை தூதுவரை சந்தித்தபோது அவர் எங்களிடம் கேட்டார். கூட்டமைப்பிற்குள் கருத்து வேறு பாடுகள் உள்ளனவா? என ஆனால் அதனை நாங்கள் மறுத்து தெளிவுபடுத்தியுள்ளோம்.
எனவே என்மீது குற்றம் சுமத்தவேண்டாம். இதேபோல் மஹிந்த ராஜபக்ஷ மா காணசபை ஆழுங்கட்சியை பிளவுபடுத்து முயன்று தோல்வி கண்டார்.
ஆனால் அது இப்போது வெற்றிகண்டுள்ளதா? என எண்ணத் தோன்றுகின்றது. இந்த பிளவு வேதனையளிக்கின்றது. எனவே இந்த விடயம் முதலமைச்சரிடம் முழுமையாக விடப்படுகின்றது.
சீதை குளித்தால் என்ன? இராமன் பார்த்தால் என்ன? அதை கம்பன் எழுதினால் என்ன? என கூறினார். இதனையடுத்து 2மணி நேர கருத்து மோதல் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் இணைப்பு
சிங்கள இராஜதந்திரம் மீண்டும் வென்றுவிட்டதா? என கேட்கும் அளவுக்கு வடமாகாண சபையில் ஆளுங்கட்சியின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக இருக்கின்றது.
அண்ணாந்து பார்த்து துப்பிக் கொண்டிருப்பதை விடுங்கள். மக்களுக்காக பேசுவதற்கும், மக்கள் நலன்களை பாதுகாப்பதற்கும் இங்கே வந்தீர்கள் அதை பேசுங்கள், மக்களுக்காக செயற்படுங்கள்.
இப்படி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலமையிலான வடமாகாணசபை ஆளுங்கட்சியை பார்த்து மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் 2வது தடவையாக 46வது அமர்விலும் கூறியிருக்கின்றார்.
இன்றைய தினம் மாகாண சபையின் 46வது அமர்வு நடைபெற்றது. இதில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது 45வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட குற்றச்சாட்டு தீர்மானம் மீதான தொடர் கருத்து மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முன்னதாகவே மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களை மக்கள் கேலி கூத்தாக பார்கிறார்கள். அதை உண்ன்மையாக்கும் வகையில் இப்போது இங்கே செயற்பாடுகள் நடக்கின்றன.
மாகாண சபையை நாங்கள் பொறுப்பேற்ற இரண்டரை வருடங்கள் முடிகின்றது. மக்களுக்காக நியதிச்சட்டங்களை உருவாக்க வேண்டும், மக்களுக்கு அடிப்படை, வாhழ்வாதார உதவிகள் செய்யவேண்டும்.
அவற்றை செய்யாமல் ஆளுங்கட்சிக்குள் பேசவேண்டிய விடயங்களை பேசிக் கொண்டு, மிண்டும். மீண்டும் அண்ணாந்து பார்த்து துப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
மீண்டும் ஒரு தடவை சிங்கள இராஜதந்திரம் வென்றுவிட்டதா என எண்ணும் அளவுக்கு உங்களின் செயற்பாடுகள் இருக்கின்றன. மக்களுக்கு தெரியும் யார் எங்கே இருக்கிறார்கள்? யார் யாருடன் தொடர்பில் உள்ளார்கள்?
யார் யாருடைய வழிநடத்தலில் இயங்குகிறார்கள்? என்பதெல்லாம் என சுட்டிக்காட்டினார்.
இதே மாகாணசபை உறுப்பினர் 45ம் அமர்வில் ஆளுங்கட்சி மோதலின்போது பாவம் மக்கள் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad