புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.


பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன். என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.....
யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த போதிலும் 2 இலட்சம் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் சவாலில் களமிறங்கி னோம். ஆனால் போர் வெற்றியை தனதாக்கிக் கொள்வதற்காக என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார்.
இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள் ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செவ்வி பின்வருமாறு, இறுதிக்கட்ட போர் தொடர்பில் பாராளு மன்ற உரையில் குற்றச்சாட்டுக்கள் சிலவற் றை முன் வைத்தீர்கள். உண்மையில் போரின் இறுதி தருணங்களில் நடந்தது என்ன?
இறுதிக்கட்ட போர் தொடர்பில் நான் குற்றச்சாட்டுக்களை செய்யவில்லை. மே மாதம் 11 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி வரையில் நான் நாட்டில் இருக்க வில்லை.
இதனை பெரிய ஒரு விடயமாக காண்பித்து அப்போதைய ஆட்சியாளரும் அவரது பாதுகாப்பு செயலாளரும் இறுதிக்கட்ட போரை அவர்கள் முன்னெடுத்ததாக வெளிப்படுத்த முற்பட்டனர்.
ஆனால் ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் புது மாத்தளனை கைப்பற்றியதன் பின்னர் விடுதலை புலிகள் களப்பு மற்றும் கடல் பகுதிற்குள் ஒன்றரை கிலோமீற்றர் அகலம் மற்றும் 15 கிலோ மீற்றர் வரை நீளமான நிலப்பரப்பிற்குள் சிறைப்பட்டனர்.
இதன் பின்னர் உண்மையில் அந்த போரை ஜெனரல் தர அதிகாரிகள் நெறிப்படுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை.
சாஜன்ட் மற்றும் கோப் ரல் தரத்திலானவர்களே போரை முடிவிற்கு கொண்டு வந்தனர். நாட்டில் நான் இல்லை என்பதற்காக ராஜபக் ஷர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை என நான் குறிப்பிட்டேன். இதன் பின்னர் வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பாக நான் கூறினேன்.
நடேசன் மற்றும் புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய வந்த போது கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இவ்வாறு தான் பரந்தளவில் பேசப்பட்டது. ஊடகங்களிலும் கூறப்பட்டது, நானும் கேள்விப்பட்டேன். எனவே தான் இது தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என நான் கூறுகின்றேன்.
ஏனென்றால் சரணடைபவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் செய்யக் கூடாது என நான் கட்டளையிட்டிருந்தேன். அவ்வாறு சரணடைய வருபவர்களை பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டும் என்பதை நான் தெளிவாகவே கட்டளையிட்டிருந்தேன்.
இதனடிப்படையில் தான் சரணடைந்த 12 ஆயிரம் பேரை பொறுப்பேற்று பாதுகாத்தோம். புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோருக்கு சரணடைய வேண்டிய தேவை காணப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.
சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடன் இது குறித்து பேசப்பட்டு பின்னர் அவர்கள் பஷில் ராஜபக் ஷவுடன் இவர்களின் சரணடைவு தொடர்பில் பேசியுள்ளனர். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் புலிதேவன் மற்றும் நடேசன் சரணடைய வந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.
எனவே இது குறித்து கட்டாயமாக விசாரணை செய்யப்பட வேண்டும். யாராவது தவறான கட்டளையை வழங்கினார்களா? அவ்வாறு வழங்கியிருந்தால் ஏன் வழங்கினார்கள்?
என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். போரின் இறுதி ஒரு வார கால பகுதியில் நீங்கள் நாட்டில் இருக்க வில்லை என்று கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் இறுதிக்கட்டப் போரை முன்னெடுப்பது தொடர்பில் இராணுவத்திற்கு கட்டளையிட்டது யார்?
மே மாதம் 11 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 17 ஆம் திகதி இரவு 9 மணி வரை நான் நாட்டில் இருக்கவில்லை. ஆனால் இராணுவத்திற்கு கட்டளையிட்டது நான் . எனது கட்டளையின் கீழ் போரை நெறிப்படுத்திய அதிகாரிகள் என்னுடன் சீனாவிற்கு சென்றிருந்தனர்.
புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான வரைபு படங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து சென்றிருந்தோம்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் களத்தில் இருந்த தளபதிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தேவையான ஆலோசனை களை வழங்கினேன். கொழும்பில் இருந்து எவ்வாறு போரை நெறிப்படுத்தினேனோ அதேபோன்று சீனாவில் இருந்தும் நெறிப்படுத்தினேன்.
கொழும்பு – சீனா என்று எனக்கு வேறுபடவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே மாதம் 19 ஆம் திகதி வரை உயிருடன் இருந்ததாக நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அதனை எவ்வாறு உறுதிப்படக் கூறினீர்கள் ?
மே மாதம் 19 ஆம் திகதி வரை போர் இடம்பெற்றது. உயிருடன் இருந்து கொண்டு அவர் எமக்கு எதிரான போரை முன்னெடுத்தார். 19 ஆம் திகதி போர் முடிந்த பின்னர் தான் நந்திக்கடல் களப்பில் வடக்கு மூலையில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது. அதாவது 19 ஆம் திகதி பகல் 11 மணியளவில் தான் போர் முடிந்து விட்டது.
பிரபாகரனின் சடலம் கிடைத்து விட்டது என அங்கிருந்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆகவே பிரபாகரன் இறுதி வரை களத்தில் இருந்து போர் செய்தமையை என்னால் உறுதிப்படக் கூற முடியும்.
19 ஆம் திகதி 11 மணியளவில் தான் பிரபாகரன் களத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் மற்றும் அவரது இளைய மகன் உயிரிழப்பு தொடர்பில் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றது…..
பிரபாகரனின் இளைய மகன் தொட ர்பில் நான் ஊடகங்களுக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தியுள்ளேன். இர ண்டு படங்களை நானும் பார்த்தேன்.
ஒரு படத்தில் சாரம் ஒன்றை போர்த்திக் கொண்டு பங்கரில் இருப்பது போன்று உள்ளது. அந்த பங்கரை இராணுவத்தினது என்று கூற முடியாது. ஏனென்றால் அந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளும் பங்கரில் தான் இருந்தனர். பிரபாகரனின் மகன் கைது செய்யப்பட்டிருந்தால் அவ்வாறு பங்கரில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
குறைந்தபட்சம் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றிற்காவது கொண்டு வந்திருப்போம்.
இராணுவ நடவடிக்கைகளின் போது முன்னிலையில் இருந்து போரிடுபவர்கள் தான் இவ்வாறு பங்கர்களில் இருப்பார்கள். எனவே நிலைப்பாடு யாதெனில் அது விடுதலைப் புலிகளின் பங்கர். அதில் தான் இளைய மகன் இருந்துள்ளார்.
ஏனென்றால் விடுதலை புலிகளின் தலைவர்களும் பங்கர்களில் தான் இருந்தனர். அவர் போர்த்திக் கொண்டிருந்த சாரம் கூட அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒன்று. அவ்வாறான சரங்கள் முகாம்களில் இல்லை. இராணுவத்திடமும் இல்லை.
எனவே பிஸ்கட் ஒன்றை சாப்பிட்டு கொண்டு அந்த பங்கரில் இருக்கின்றமை இதிலிருந்து வெளி ப்படுகின்றது. அவர்கள் இறுதியில் பங்கர்களில் தான் இருந்தனர். அவரது குடும்பமும் கூட இருந்து இருக்கலாம். பிரபாகரனும் இருந்து இருக்கலாம்.
மற்றப் புகைபடத்தில் துப்பாக்கி சூடுபட்டு கீழே கிடந்தார். எனவே எப்படி சுடப்பட்டார்?
எங்கு வைத்து சுடப்பட் டார்? என்பது தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. உதாரணமாக 16 ஆம் திகதி இரவு நந்திக்கடல் களப்பை சுற்றி மூன்று பாதுகாப்பு வலயங்களை நான் போட்டிருந்தேன்.
விடுதலை புலிகள் இந்த பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு முல்லைத்தீவு காட்டுக் குள் செல்வதற்கு முற்பட்டனர். முதலாவது பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்தவர்களின் சுமார் 75 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் போது சில சடலங்களை எம்மால் எடுக்க முடியாமல் போயிருக்கலாம். களப்பில் விழுந்திருக்கலாம்.
சூட்டுக் காயங்களுடன் சிலரை தூக்கியும் சென்றிருக்கலாம். அந்த இடத் தில் பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இருந்தார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. பாதுகாப்பு வலயங்களை உடைத்து கொண்டு பிரபாகரனின் குடும்பத்தினருடன் முல்லைத்தீவு காட்டிற்குள் செல்வதற்கே விடுதலை புலிகளின் போராளிகள் முற்பட்டனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இளைய மகன் துப்பாக்கி சூட்டிற்கு இல க்காகியும் இருக்கலாம்.
எனவே அந்த புகைப்படங்கள் இராணுவ முகாம் ஒன்றில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூற இயலாது. உயிரிழந்திருக்கலாம். அவ்வாறான படங்களை எடுக்கவும் முடியும் .ஆனால் அந்த படங்கள் உண்மை என்றால் பாதுகாப்பு வலயங்களை உடைக்க முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருக்கலாம்.
ஏனென்றால் பாதுகாப்பு வலயங்களை உடைத்துக் கொண்டு முன்னோக்கி நகர முற்படுகையில், அதாவது 17 ஆம் திகதி இரவு அவர்கள் களப்பு பகுதியில் வட திசைக்கு வந்து எமது பாதுகாப்பு வலயங்களை உடைத்து புதுமாத்தளன் பக்கம் செல்வதற்கு முற்பட்டனர். அந்த இடத்தில் தான் சாள்ஸ் என்டனி உட்பட 200 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் போது இடம்பெற்ற போர் 17 ஆம் திகதி இரவு 2.30 மணியிலிருந்து மறுநாள் அதாவது 18 ஆம் திகதி பகல் 1 மணி வரை நீடித்தது. இங்கு தான் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். பிரபாகரனும் இந்த இடத்தில் இருந்து தான் போர் நீடித்ததன் காரணமாக அங்கிருந்து வட திசையை நோக்கி செல்ல முற்பட்டிருப்பார். எனவே அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழந்திருக்கலாம்.
விடுதலை புலிகளின் வேறு தலைவர்கள் சரணடைவது தொடர்பில் அரசியல் தரப்புகளுடன் தொடர்புகொண்டு உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா ? 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர். அதற்கு முன்னர் சரணடைவது தொடர்பில் பேசப்படவில்லை.
சரணடைவது தொடர்பில் எம்முடன் யாரும் தொடர்புக்கொள்ளவும் இல்லை. போர் நிறுத்தம் கேட்ட போது நாங்கள் வேண்டாம் என்று கூறியும், மஹிந்த ராஜபக் ஷ போர் நிறுத்தத்தை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வழங்கினார்.
இந்த போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு பிரபாகரன் முல்லைத்தீவில் எனது பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதன் போது 5 கிலோ மீற்றர் வரை பின் சென்று ஒரு மாதிரி நிலையை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம். இதனை தவிர சரணடைவது தொடர்பில் என்னுடன் யாரும் பேச வில்லை. ஆனால் பஷில் ராஜபக் ஷவுடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல் உள்ளது.
எனவே இதனுடன் மேலும் தொடர்புபட்ட சர்வதேச தரப்புகள் ஒரு கட்டத்தில் வெளியில் வந்து கூறுவார்கள். விடுதலை புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள். இந்த பணம் எப்போது வழங்கப்பட்டது?
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதே விடுதலை புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களை வாக்களிக்க விடாது பிரபாகரன் தடுத்தார்.
ஒருவர் மாத்திரமே வாக்களித்தார். அவரது கைகளும் வெட்டப்பட்டது. வாக்களிப்பதை தடுப்பதற்காகவே பிரபாகரனுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
பஷில் ராஜபக் ஷ விடுதலை புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பில் எனக்கு கூறினார். 200 மில்லியன் ரூபா வழங்கியுள்ளனர். இந்த பணம் எதற்காக வழங்கப்பட்டது? தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுப்பதற்கு கைமாறாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என பிரபாகரனிடம் இவர்கள் கேட்டுள்ளனர். கடற் புலிகளுக்கு தேவையான படகுகள் மலேசியாவில் உள்ளன.
அதனை பெற்றுக் கொள்ள 2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. அதற்கு தேவையான பணத்தை தருமாறு பிரபாகரன் கேட்டுள்ளார். இதனடிப்படையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என கூறினாலும் அவற்றை நான் பதிவு செய்ய வில்லை.
ஆனால் அப்போதைய இராணுவ தளபதி என்ற வகையில் எனக்கு நினைவில் உள்ளது. போரின் இறுதி தருணத்தில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் எதுவும் உங்களுக்கு காணப்பட்டதா? போரின் கௌரவத்தை பெற்றுக்கொள்ளும் பேராசையில் என்னை ஓரங்கட்ட முற்பட்டனர்.
ஜகத் ஜயசூரிய வவுனியாவிற்கு பொறுப்பாக இருந்தார். இவ ருக்கு பொறுப்பளித்து விட்டு என்னை விலகியிருக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கூறினார். நல்லவேளை, நான் விலக வில்லை.
ஏனென்றால் அந்த காலப்பகுதியில் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதிகளில் பிரபாகரன் கடும் தொடர் தாக்குதல்களை இராணுவ நிலைகள் மீது தொடுத்தார். நான் இருந்திருக்கா விட்டால் போர் தலைகீழாகி விட்டிருக்கும்.
ஜகத் ஜயசூரியவிற்கு அவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ளவோ பதில் தாக்குதலுக்கு திட்டமிடவோ முடியாது. இதனை தவிர எனக்கு வேறு அழுத்தங்கள் கொடுக்க வரவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் என்னூடாக இல்லாமல் கனிஷ்ட நிலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
சவேந்திர சில்வா, கமல் குணரட்ன ஆகியோருடன் பாதுகாப்பு செயலாளர் தொலைபேசியில் தொடர்புக்கொண்டிருந்தார். இவ்வாறு உரையாடியமையினால் தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என நான் நினைக்கின்றேன்.
பாதுகாப்பு செயலாளர் என் ஊடாக தான் கனிஷ்ட அதிகாரிகளுடன் பேசியிருக்க வேண்டும். அவர் செய்தது தவறு . ஆனால் மஹிந்த ராஜபக் ஷ 2008 ஆம் ஆண்டில் இருந்து போரை சீக்கிரம் முடித்து தருமாறு எனக்கு கூறிக்கொண்டிருந்தார்.
அவசரமாக போரை முடிவிற்கு கொண்டு வர முடியாது. பொது மக்கள் உள்ளே இருக்கின்றனர். எனவே நிதானமாக தான் போரை முன்னெடுக்க வேண்டும் என அப்போது நான் கூறினேன்.
யார் உயிரிழந்தாலும் பரவாயில்லை, எவனை கொலை செய்தாவது போரை முடியுங்கள் என மஹிந்த ராஜபக் ஷ கூறினார். பொதுமக்கள் பாதிப்புகள் தொடர்பில் உங்களால் கூற முடியுமா? பொது மக்கள் மீதான பாதிப்புகள் தொடர்பில் கூறப்படுவது போன்று பல்லாயிரம் பேர் உயிரிழக்க வில்லை. அவ்வாறு உயிரிழந்திருந்தால் அங்கு தோண்டும் போது எலும்புகள் கிடைத்திருக்கும்.
ஆனால் புதுமாத்தளன் பகுதியில் விடுதலை புலி உறுப்பினர்களை அவர்களது புலி கொடியுடன் வானத்திற்கு துப்பாக்கி பிரயோகம் செய்து புதைப்பதை கண்டோம்.
900 பேர் வரை புதைப்பதை மேலிருந்து யு வீவில் பார்த்துக் கொண்டிருந்தோம். இதனை தவிர வேறு உயிரிழந்தவர்களை புதைப்பதை நாங்கள் காண வில்லை. அதே போன்று போரின் இறுதி ஒன்றரை மாதத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
காயமடைந்தவர்களை இவ்வாறு வெளியில் கொண்டு வந்து புல்மோட்டையில் வைத்து கடற்படையிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு 350 பேர் வரை தான் கொண்டு வந்தனர். கூறுவது போன்று உயிரிழந்திருந்தால் படுகாயமடைந்தவர்கள் 2 அல்லது 3 ஆயிரம் வரையில் இருந்திருக்க வேண்டும். எனவே பாரிய இழப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல.
ஆனால் போர் இடம்பெற்ற பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சிறு காயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. மிகவும் கவனமாக போரை முன்னெடுத்தமையினால் தான் இறுதித் தருணத்தில் 2000 இராணுவம் உயிரிழந்தது.
2008 ஆம் ஆண்டில் முழு வருடத்திலும் 2000 இராணுவமே உயிரிழந்தது. 2009 ஆம் ஆண்டு 4 மாதங்களில் 2000 பேர் உயிரிழந்தனர். கனரக ஆயுதங்கள் இதன் போது பயன்படுத்த வில்லை. நீண்ட தூரம் தாக்கக் கூடிய தன்னியக்க துப்பாக்கிகள் பயன்படுத்த வில்லை.
கவனமாக போரை முன்னெடுத்தமையினால் எமக்கு இழப்புகள் அதிகமானது. ஆனால் இறுதி போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளது….
நாங்கள் பயன்படுத்த வில்லை. அவ ர்கள் பயன்படுத்தினார்கள். சிறு ரக மோட்டார் குண்டுகளை விடுதலை புலி கள் பயன்படுத்தினார்கள். இராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சிகிச்சை கள் அளித்தோம். எனது இராணுவம் அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்த வில்லை. அவை பெற்றுக் கொள்வதும் எளிதான விடயமல்ல. எந்த நாடுகளும் அவ்வாறான ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை.
போரின் பின்னரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை….. நல்லாட்சி அரசாங்கம் அவர்களை கைவிட வில்லை. மிகவும் நட்பு ரீதியாக தமிழ் அரசியல் தலைமைத்துவங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றது.
முதலமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இதனை யாரும் செய்ய வில்லை. வடக்கில் வீதிகளை அமைத்தார்கள். அதில் தான் கொள்ளையடிக்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டு செயற்பாட்டார்களே தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கவனம் செலுத்த வில்லை. பாதுகாப்பு செயலாளர் உட்பட சூழ இருந்தவர்களும் அதற்கு ஆலோசனை வழங்க வில்லை. ஆனால் நான் போர் முடிவடைந்த பின்னர் மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை தேவைகைள பூர்த்தி செய்வது தொடர்பில் திட்டம் ஒன்றை கையளித்தேன்.
அதனை பொருட்படுத்த வில்லை. விடுதலை புலிகளின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது? சிங்கள ஊடகங்கள் பல புலிகளின் தங்கங்கள் தொடர்பில் வெளிப்படுத்தின. ஆனால் அவை குறித்து இன்றும் விசாரணைகள் ஏன் முன்னெடுக்க வில்லை என எனக்கு விளங்கவில்லை. அரசாங்கம் புலிகளின் சொத்துக்கள் மற்றும் தங்கம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
நான் இராணுவ தளபதியாக இருந்த காலப்பகுதி யில் 220 கிலோ தங்கம் கிடைத்தது. ஆனால் 110 கிலோ தங்கம் தான் கிடைத்ததாக நான் சிறையில் இருந்த போது பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். சரியாக 50 வீதத்தை எடுத்து விட்டனர்.
அதன் பின்னரும் பல இடங்களில் தங் கம் கிடைத்தது. புலிகளின் தங்கம் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது. அப்போது அதி காரத்தில். இருந்தவர்கள் அதற்கு பொறு ப்புக் கூற வேண்டும். விேசடமாக பாது காப்பு செயலாளர் அறிந்திருக்க வேண் டும்.
இறுதிக்கட்டப் போர் தொடர்பில் இராணு வத்திற்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன ? சர்வதேசத்தில் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் பயங்கரவாதத்திற்கு உதவி செய் தனர்.
இவர்கள் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பெரிதாக பேசு கின்றனர். ஆனால் இராணுவம் சர்வ தேச மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு மதிப்ப ளித்து போரை முன்னெடுத்தது. மனித உரிமைகளை மீறுவதற்கு நான் திட்டங் கள் அமைக்க வில்லை.
இராணுவ நடவ டிக்கைகளின் போது கண்காணிப்பு செய் தேன், வழி நடத்தினேன். போர் வியூகங் களை வகுத்தேன் இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் தியே முன்னெடுத்தேன். ஆனால் விடு தலை புலிகள் மக்களை கவசமாக பயன் படுத்தினார்கள். அதனை புலிகள் பொறு ப்பேற்க வேண்டும்.
எவ்வாறாயினும் விடு தலை புலிகளிடம் சிறைப்பட்டிருந்த 2 இலட்சம் மக்களை கடும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்டெடுத்தோம். இந்த கட்டத் தில் இராணுவ அதிகாரிகள் சாதாரண சிப்பாய்கள் கூடுதலாக உயிரிழந்தனர்.
ஆனால் மக்களை பாதுகாப்பாக மீட்டெ டுக்க முன்னுரிமை வழங்கி செயற்பட் டோம். எவ்வாறாயினும் யாராவது தவறு செய்திருந்தால் அதனை தனிப்பட்ட ரீதி யில் பொறுப்பேற்க வேண்டும். மொத்த இராணுவத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியாது.
ஆட்சியாளரும் அதனை சூழ இருந்தவர்களும் கொள்ளையடித்து பல் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் இராணுவத்திலும் ஓரிருவர் இருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை.  என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad