புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2016

திருப்பதி ஏழுமலையானை ரஞ்சிதாவுடன் தரிசித்த நித்தியானந்தா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சீடர்கள் புடைசூழ சுவாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூருவில் உள்ள நித்யானந்தா மடத்தின் பீடாதிபதி சுவாமி நித்யானந்தா, கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலிலும் (வாயுலிங்கேஸ்வர்), திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் ஜடாமுடியுடன் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அவர்களும் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.
புதிய தோற்றத்தில் ஜடா முடியுடன் வந்திருந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் காண ஏராளமானோர் கூடிவிட்டனர். பத்திரிகையாளர்களும் அவர்களை அந்த தோற்றத்தில் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், நித்யானந்தாவின் சீடர்கள் செய்தியாளர்களை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். இதனால், பத்திரிகையாளர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் காரில் புறப்பட்டு திருமலைக்கு சென்றனர்.

இந்நிலையில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 16 சீடர்களுடன் வந்திருந்த அவர்கள், வரிசையில் நின்று நைவேத்ய பிரேக் தரிசனத்தில் ஏழு மலையானை வழிபட்டனர்.
ஆனால் திருப்பதியில்,  ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் விபூதி அணிந்து வந்திருந்தார். நித்யானந்தாவும், ஜடாமுடி இல்லாமல் காவி உடை அணிந்து காவி தலைப்பாகை அணிந்து இருந்தார். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் பார்க்க ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர். சிலர் புகைப்படமும் எடுத்தனர்.

ஆனால், புகைப்படம் எடுக்கவிடாமல் நித்யானந்தாவின் சீடர்கள் வளையம் போல நின்று நித்யானந்தாவுக்கும், ரஞ்சிதாவுக்கும் பாதுகாப்பு அளித்தனர். கோயில் வளாகத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் நித்யானந்தாவின் சீடர்கள் ஏற்படுத்திய பரபரப்பு, ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்த பக்தர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
அப்போது செய்தியாளர்கள் நித்யானந்தாவிடம் பேட்டி காண முற்பட்டனர். ஆனால் நித்யானந்தாவோ, சிரித்து கொண்டே எதுவும் பேசாமல் காரில் ஏறி சென்றுவிட்டார்.

ad

ad