புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

தற்போதைய செய்தி .தேமுதிக – ம. ந.கூட்டணியில் மேலும் 4 கட்சிகள்: திமுக - அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிப்பா?

    
மிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை 'கிலி'யில் தள்ளியுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மேலும் வலுவடையும் விதமாக 4 கட்சிகள்,
அக்கூட்டணியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடந்து வருவதாக மக்கள் நலக் கூட்டணியினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில், கடந்த 50 ஆண்டுகளில் திமுக,அதிமுக அல்லாத மாற்று அணியாக,  அதுவும் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது தற்போதுள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி.  அதை மெய்ப்பிக்கும் வகையில் முதலில் 4 கட்சிகளாக இருந்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவோடு 5 கட்சி அணியானது. தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்ததன் மூலம் அந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இது திமுக, அதிமுக தரப்புக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த்  கட்சியிலிருந்தும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்தும் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிருப்தியாளர்கள் அணி திரண்டுள்ளனர். இது தானாக நடந்ததா அல்லது நடக்க வைக்கப்பட்டதா என்பது குறித்து காரசார விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.  மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தவுடன் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் திமுகவிற்கு ஆதரவாகப் பேசி, வாசனோடு உடன்பட மறுக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளின் அதிருப்தியாளர்களின் பின்னணியில் திமுகவின் கரம் இருக்கிறது என்பது  மக்கள் நலக் கூட்டணியினரின் குற்றச்சாட்டு. 

இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியில் இருந்த பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தற்போது வெளியேறியுள்ளது. அதிமுக தலைமை தங்களை மதிக்கவில்லை என்றும், கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி,  அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளது.

அதனால் அந்தக் கட்சி,  எந்தக் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதே நேரத்தில், திமுகவுடன் தற்போது கூட்டணி சேருவதைவிட மக்கள் நலக் கூட்டணியுடன் இணைவது சிறந்தது என்று  வேல்முருகன் கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இது தொடர்பாக சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது," மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் எங்களை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே எங்களை மதித்து நடத்தும் கூட்டணியில் இணைய விரும்புகிறோம். அதனால் எங்களின் தேர்வாக மக்கள் நலக் கூட்டணி இருக்கிறது. அதில் இணைய விரும்புகிறோம்" என்று நம்மிடம் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாது தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் மேலும் 3 கட்சிகள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகம், மற்றுமொரு முக்கிய தென்மாவட்ட அமைப்பு, திமுகவால் கைவிடப்பட்ட தெகலான்  பாகவியின் எஸ்.டி.பி.ஐ.கட்சி ஆகியவை மக்கள் நலக் கூட்டணியில் இணைய முனைப்புக் காட்டிவருகின்றன. 

அவையும் இணைந்தால் தமிழக அரசியல் அரங்கில் 10 கட்சிகளுடன் இருக்கும் மெகா அணியாக தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி இருக்கும். ஏற்கெனவே பல முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியாக இருக்கும் அணியே,  வெற்றியை ருசித்துள்ளது என்பதால் இந்தக் கூட்டணி, தற்போது தமிழக அரசியலில் வெகுவாக கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. 

இந்தக் கட்சிகள் இணைந்தால்,அவர்களுக்கான தொகுதிகளை பங்கீடு எப்படி செய்துகொள்வது என்றும், எந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்றும்  மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியாக  உருவாகிவிட்டால்,  அது வலிமையான அணியாக இருக்கும் என்றும் வாக்குகளின் சதவீதம் அதிகரித்து அதிமுக, திமுகவை வீழ்த்தும் வகையில் இருக்கும் என்றும் அக்கூட்டணியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

தற்போது உள்ள நிலவரத்தின்படி திமுகவின் வாக்கு சதவீதம் 23 முதல் 28 வரை இருக்கிறது. காங்கிரசுடன் திமுக இனைந்துள்ளதால் அதன் வாக்குகளையும் சேர்த்து அதிகபட்சம் 31 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதே போல அதிமுகவிற்கு  30 முதல் 33 சதவீதம் வரை ஓட்டுகள் உள்ளன. அதற்கு இணையாக தற்போது உள்ள  தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் அணி வாக்கு சதவீதத்தில் பலமாக உள்ளது என்றும்,  இந்தக் கூட்டணி உறுதியாக 20 சதவீதம் அளவிற்கு வாக்குகள் வாங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இந்த அணிக்கு வருவதால், இதன் வாக்கு சதவீதம் 30 ஐ எட்டும் என்று கூறப்படுவதால், தங்கள் அணி திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது என்று தேமுதிக -  மக்கள் நலக் கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
அவர்களது இந்த நம்பிக்கை அவர்களை ஆட்சியில் அமர்த்துமா என்பது மே 19 ல் தெரிந்துவிடும்.

ad

ad