ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலகங்களில் சுவிற்சர்லாந்து
பொலிஸாரால் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள
அறிக்கையயான்றில், நையோன் கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதலானது, சில ஆதாரங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையயான்றில், நையோன் கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதலானது, சில ஆதாரங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக கால்பந்தாட்ட அலகான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) தற்போதைய தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளருமான ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றதைத் தொடர்ந்தே மேற்படி தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என இன்பான்டினோ மறுத்துள்ளார்.