புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

கோவையில் 6 மாதங்களாக மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிப்பட்டது!

கோவை, மதுக்கரை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுதிய காட்டு யானை
, 'மிஷன் மதுக்கரை மகாராஜ்' என்ற பெயரில் திட்டம் வகுத்து பிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதிக்குள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை மதுக்கரை, அரிசிபாளையம், சீரபாளையம், எட்டிமடை பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும், சில சமயங்களில் இந்த யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இந்த யானை தாக்கியதில் வனத்துறை ஊழியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். இரவு நேரங்களில் யானை ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையும் அறிவுறுத்தியது.
இதையடுத்து, 'மிஷன் மதுக்கரை மகாராஜ்' என்ற பெயரில் திட்டம் வகுத்து காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த ஒரு வாரமாக அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர், மிஷன் மதுக்கரை மகாராஜ் பணிகளை நேற்று துவங்கினர். இந்த யானை நேற்றிரவு மதுக்கரை ராணுவ முகாம் பகுதிக்குள் நுழைந்தது. இதனை கண்காணித்த வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் ராணுவ முகாம் பகுதியில் கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதனையடுத்து ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை ராணுவ முகாமில் இருந்து வெளியேறி, எதிரே உள்ள வனப்பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்ற யானை லேசாக மயக்கம் அடைந்த நிலையில், கலீம் மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகள் வனப்பகுதிக்குள் சென்று அந்த யானையை நகர விடாமல் தடுத்து நிறுத்தின.

இதை தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் கயிறு மற்றும் இரும்பு சங்கிலியால் காட்டு யானையை வனத்துறையினர் கட்டினர். சிறிது நேரத்திற்கு பிறகு காட்டு யானையை லாரியில் ஏற்ற முயன்ற கும்கி யானை கலீம் உடன், காட்டு யானை திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பாதி மயக்கத்தில் இருந்த யானை லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பொதுமக்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

இதை தொடர்ந்து, பிடிபட்ட காட்டு யானையை கும்கி யானையாக மாற்றுவதற்காக, வனத்துறையினர் டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்
.

ad

ad