புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை கண்ணாடியினால் பொறுத்தப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன
பார்வையிட்டார். இந்திய துணைத்தூதாரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (சனிக்கிழமை) யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்ததுடன், இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ ஆகியோர் செய்மதி மூலம் யோகா பயிற்சியினை பார்வையிட்டனர்.
அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இந்திய தூதுவர் வை.கே.சிங்ஹா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை மற்றும் இந்திய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, பின்னர் பாடாசலை மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறிகள் வளவாளர்களினால் அளிக்கப்பட்டன.
வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் யோகா பயிற்சியில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்

ad

ad