புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2016

ரஷ்ய வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமற்றது : விளாடிமிர் புடின்

பிரேசிலின் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை
நியாயமற்றது என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட சில ரஷ்ய வீரர்கள், ஊக்கமருந்து உட்கொண்டமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊக்கமருந்து விவகாரத்தில் அரசிற்கும் தொடர்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (International Association of Athletics Federation), ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீது விதித்த தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
எனினும் தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் அவர்கள் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் பட்சத்தில், அவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இவ்விடயம் தொடர்பில் கூர்ந்து விசாரணை செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு உள்ளிட்ட ஏனைய குழுக்களிடம், விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று (சினிக்கிழமை) சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாகிகள் தொலைபேசியில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.