புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

தமிழர்களின் பிரிக்க முடியாத உரிமைகளை விழுங்கும் போக்கு

இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு முதலில் காணப்பட்டாக வேண்டும். அதன் பின்னரே வடக்கு, கிழக்கு மாகாணங்களின்
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்கு உதவ எங்கள் நாடுகள் களம் இறங்கும்.
உலக நாடுகள் தமது மேற்போந்த காத்திரமான முடிவை, ஆட்சியில் உள்ள இலங்கை அரசுக்கு இடித்து உரைத்துள்ளன. அத்தோடு தரிக்காது, நிதி வழங்கும் டோக்கியோ மாநாடு தனது உதவியை நிறுத்தியும் உள்ளது; கைவிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் உரிமைகள் தொடர்பில், நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, பதவியில் உள்ள அரசுக்கு எந்தவகை சார்ந்த நிதி உதவியையும் வழங்கத் தயாரில்லை என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அறிவிக்கப்பட்டாயிற்று.
பின்னோக்கிப் பார்த்தால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதி வழங்கும் பொருட்டு, தமது நாட்டின் நிதிக் கொடையாளர்களது உதவி களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் மிகுந்த அக்கறை காட்டியிருந்தது.
அதன் பொருட்டு ஜப்பானின் நிதிக் கொடையாளருக்கான மாநாடு ஒன்றை நடத்தவும் (உத்தேசமாகத்) திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது இப்போது ‘அம்போ’ என்றாகிவிட்டது.
வடக்கு மற்றும் கிழக்கின் போர் இடர்களை வெளி உலகுக்குக் காட்டி, உதவி வழங்கும் நாடுகளிடம் இருந்து பொருளாதார மற்றும் கட்டுமானங்களுக்கான நிதி உதவிகளையும் இலகு கடன்களையும், இலங்கை அரசு காலங்காலமாகப் பெற்றிருந்தமை, இரகசியம் அல்லவே. அந்த நிதி முற்றுமுழுதாக, வடக்கில் கிழக்கில் போரால் பாதிப்புற்ற தமிழ் மக்களுக்கு பயனளித்து வருகிறதா என்பது பெரும் கேள்விக்குரிய ஒன்றாக உயர்ந்து நிற்கிறது!

ad

ad