புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

வேலணைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பாரிய குற்றங்களும், சமூகவிரோத செயற்பாடுகளும்
அதிகரித்துச் செல்கின்றது என்று பிரதேச செயலாளர் திருமதி தெ.சுகுணரதி குற்றம் சுமத்தியுள்ளார்.
மணல் கடத்தல், இறைச்சிக்காக மாடு வெட்டுதல், சட்டவிரோதமான மரு விற்பனை போன்றவை அங்கு தாராளமாக நடைபெறுவதாகவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே பிரதேச செயலர் இக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- வேலணைப் பிரதேசமானது 4 தீவுகளைக் கொண்ட பிரதேசமாகும். இவற்றில் மண்டைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளுக்கே பொலிஸ் போஸ்ட் உள்ளது.
ஏனைய பகுதிகளின் பாதுகாப்பு ஊர்காவற்றுறையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கையில்தான் உள்ளது.
வேலணையில் மதுபான சாலைகளே இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான வாலைகளை விட அதிகமான மதுபானங்கள் அங்கு சட்டவிரோமாக விற்பனை செய்யப்படுகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்படும் மதுபானப் போத்தல்கள் வேலணை மேற்குப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதே போன்று வேலணையில் உள்ள மாடுகள் படிக்கப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. அங்கு வெட்டப்படும் மாடுகளின் இறைச்சிகள் வேறு பிரதேசங்களுக்கும் கடத்தப்படுனிற்ன.
இவ்வாறானவர்களிடம் இருந்து வாழ்வாதாரங்களுக்காக வழங்கப்படும் தமது மாடுகளை பாதுகாத்துக் கொள்வதில் பொது மக்கள் சிரமங்களை எதிர் கொள்ளுகின்றார்கள்.
மேலும் இப் பகுதியில் மணல் கொள்ளை தாரளமாக நடைபெறுகின்றது. குறிப்பாக மாலை 5 மணியில் இருந்து இரவு 11 மணிவரைக்கும் மற்றும் அதிகாலை 4 மணியில் இருந்து காலை 7 மணிவரைக்கும் இவ்வாறான மணல் கொள்ளைகள் நடைபெறுகின்றன.
மணல் கடத்தல்களின் பொலிஸாரினால் கைது செய்யப்படுபவர்கள் மீண்டும் வெளியில் வந்து அதே தொழிலை தொடர்ந்து துணீகரமாக செய்கின்றார்கள். வீதிவளியாக கடத்தல்கார்கள் பயணிப்பது இல்லை. துரவைகளின் ஊடாகவே இக் கடத்தல்களை செய்கின்றார்கள்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே பொலிஸாருடைய கண்காணிப்பு வேலணைப் பிரதேசத்திற்கு முழுமையாக தேவைப்படுகின்றது என்றும் பிரதேச செயலர் மேலும் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர்:- 2 வாரங்களுக்குள் வேலணையில் நடைபெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவோம் என்று உறுதிமொழி வழங்கியிருந்தார்

ad

ad