புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?

இலங்கை அரசியல் களத்தில் தற்போது வீட்டுத் தலைவருக்கான உத்தியோகபூர்வ வீடு பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது அவர் வசிக்கும் வீடு
சிறிதாக இருக்கிறது.
சொகுசு வசதிகள் எதுவும் இல்லை. மாடிப்படி ஏறி இறங்குவதற்கு ஐயா பெரிதும் கஷ்டப்படுகிறாராம். அரசால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லமும் இன்னும் வழங்கப்படவில்லை. அதைப் பெறுவதற்குரிய முயற்சி தற்போது இடம்பெறுகிறது. அரசும் இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
எனவே, அந்த சின்ன வீட்டுப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே தற்போது எழும் கேள்வியாகும். வீட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் அண்மையில் இதுபற்றி நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தனர்.
அதேவேளை, அசால் வழங்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்துவதில் அவர் தயக்கம் காட்டுவதுபோல் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களைக் கூட எதிர்க்கட்சி பிரதம கொறடா அலுவலகத்துக்கு வழங்கியுள்ளார் என்று தகவல்

ad

ad