புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

பஞ்சு அருணாச்சலம் காலமானார்




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75.


திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பன்முக ஆளுமைக் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். காரைக்குடி அருகே சிறுகூடல் பட்டியில் 18 ஜூன் 1941ல் பிறந்தார். கவியரசு கண்ணதாசனிடம் காப்பி ரைட்டராகவும், அவரது உதவியாளராகவும் பணியாற்றிய பஞ்சு, படிப்படியாக திரையுலகில் முன்னேறினார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.

தனது அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். ரஜினி, கமல் ஆகிய முன்னணி கதாநாயகர்களை வைத்து தனது பி.ஏ.ஆர்ட் புரொடக்சன்ஸ் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். ஏ.வி.எம். நிறுவனத்துக்காக இவரது கதை, திரைக்கதையில் உருவான ரஜினி நடித்த முரட்டுக்காளை மாபெரும் வெற்றி பெற்றது. வில்லனாக நடித்து வந்த ரஜினியை புவனா ஒரு கேள்விக்குறி மூலம் குணச்சித்திர கதாநாயகனாக நடிக்க வைத்து ரஜினியை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றவர் பஞ்சு. ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் மரியாதைக்குரியவராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினியின் ஆரம்பகால சினிமா வியாபாரங்களை நுணுக்கமாக கையாண்டு ரஜினிக்கு பக்க பலமாக இருந்தவர். 

இளையராஜா மகன்கள் கார்த்திக்ராஜாவையும், யுவன்சங்கர்ராஜாவையும் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் பஞ்சு அருணாச்சலம்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது திரைப்பட தயாரிப்பு தொழிலை நிறுத்திவிட்டார். இவரது மகன் பஞ்சு சுப்பு இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ad

ad