புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

சேலம் - விருத்தாசலம் இடையேதான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு?

சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவுடன்தான் இந்த விசயம் அறிந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே விருத்தாசலத்தில் ரயில் என்ஜின் மாற்றும்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக என ரயில்வே போலீசாரிடம் நாம் விசாரித்தபோது, சேலத்தில் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரயில் விருத்தாசலத்திற்கு 11.20 மணிக்கு வருகிறது. பின்னர் 12.15க்கு புறப்பட்டு 4.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது. 

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கொள்ளை நடக்க வாய்ப்புகள் இல்லை. அதேபோல் விருத்தாசலம் - சென்னை இடையேயும் நடக்க வாய்ப்புகள் இல்லை. விருத்தாசலம் - சென்னை இடையே மின்பாதை வழியாக ரயில் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் நடமாட்டம் அதிகம். ஆகையால் ரயிலின் மேற்கூரையில் ஏற வாய்ப்புகள் இல்லை. 

சேலத்தில் புறப்பட்டு விருத்தாசலம் வரும் வரை டீசலில் இயங்குகிறது. சேலம் - விருத்தாசலம் இடையே மின்பாதை இல்லாததால் மேற்கூரையில் ஏறி கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த பாதையில் அடிக்கடி ரயில் இயக்காது. ஆகையால் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் இருக்காது. இதனை கொள்ளையர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த பாதையில் ரயில்வே போலீசார் சோதனை நடத்துகின்றனர். கொள்ளையடிக்கப்பணம் இந்த பாதையில் எங்கேனும் சிதறி கிடக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர் என்று தெரிவித்தனர்.

ad

ad