புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

நடிகை ஜோதிலட்சுமி காலமானார்




பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுக்கு ஆகிய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1963ல் எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்து பெண் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். பூவும் பொட்டும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் எம்.ஜி.ஆருடன் நீரும் நெருப்பும், தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், விக்ரம், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.

கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு சினிமா இடம் பெயர்ந்தபோது கவர்ச்சிக்கென்று தனி நடிகைகள் உருவானார்கள். இவர்கள் கவர்ச்சி நடிகையாகவே சினிமாவுக்கு வந்தவர்கள் அல்ல. நாயகியாக வந்து அதை தொடர முடியாமல் கவர்ச்சி நடிகைகளாகவும், கவர்ச்சி ஆட்டக்காரிகளாகவும் மாறினார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, விஜயலட்சுமி, ஹெலன், மாயா என்ற ஒரு பட்டாளமே படையெடுத்தது. இவர்கள் காலத்தில்தான் கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி ஆட்டங்கள் வந்தது. இவர்கள் நடித்த படத்தை பார்க்க மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. 

ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் கொக்கு சைவ கொக்கு என்ற பாடலிலும், சேது படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலிலும் ஆடியுள்ளார் ஜோதிலட்சுமி.

ad

ad