புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

மண்டேலாவின் நல்லிணக்க செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்-நல்லிணக்க குழுவிடம் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு  அரசாங்கம் நல்லிணக்க செயலணி ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான விசேட செயலணி இன்று வவுனியாவில் நடாத்திய அமர்வின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயலணியின் வவுனியா மாவட்ட உப குழு இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூட மண்டபத்தில் மக்கள் கருத்துக்களை அறிந்து வருகின்றது.
 
இந்த நிகழ்வு இன்று காலை 9.30ற்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இதற்கமைய இந்த செயலணியில் முன்னிலையாகி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட   வவுனியாவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டிய மனித உரிமை மீறல்களே யுத்தகாலத்தில் இடம்பெற்றதாக  சுட்டிக்காட்டினார்.
  
வடக்கு, கிழக்கில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது மாத்திரமன்றி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள நிர்மாணித்துக்கொடுக்கப்படும் வரை நல்லிணக்கத்தை  ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad