புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார்  என்று  அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ad

ad