வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில் தகுதி பெற்ற இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்த சிறு பணியாளர்களின் சேவையானது நிரந்தரமானது என்றும் நேர்முகப் பரீட்சையின் போதே விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேற்படாமல் தோன்றி இரண்டு பாடங்களில் மாத்திரம் திறமை சித்தி பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 18 தொடக்கம் 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் என்றும், விண்ணப்ப முடிவு திகதி இந்த மாதம் 30ஆம் திகதி வரையில் மாத்திரம் என்றும் குறிப்பிட ப்பட்டுள்ளது.
இந்த தொழில் தொடர்பான மேலதிக விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.