புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

எழுக தமிழ்” பேரணியில் அணிதிரளுமாறு அழைப்பு

எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும்  சர்வதேச சமுகத்திற்கு  உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில்  ஆரம்பமாகவுள்ளது. பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்தும் பேரணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.  இவை பலாலிவீதி இலுப்பையடிச் சந்தியில் ஒன்றாக இணைந்து காங்கேசன்துறை வீதியினூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும்  அரசியல் பேதங்களை மறந்து எமது தேவை என்ன,எமது உரிமை என்ன என்பதை  ஒருமித்த தமிழர்களின் குரலாக இப்போராட்டதில் வெளிப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறும் கேட்டுக் கொ‌ண்டனர்.இதன்மூலம் சர்வதேச சமூகத்தை சிந்திக்க வைக்கவும் அரசாங்கத்தை திரும்பிப் பார்க்க வைக்கவும் முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த  போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கல்விச்சமுகம் பூரண  ஆதரவை  வழங்பகியுள்ளதாக  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

காலத்தின் தேவைகருதி ஐனநாயக களத்தில் நின்று எமது போராட்டங்களை சர்வதேச சமுகத்திற்கு  உணர்த்த அரசியல் பேதங்கள் இன்றி போராட அனைவரையும் ஓன்றுதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் லக்ஸ்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

ad

ad