புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

தற்காலிக முதல்வர் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டு என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த
வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் அப்பப்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை அவரது புகைப்படத்துடன் வெளியிடவேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இது பொதுநல வழக்கு அல்ல என்றும் சுய விளம்பரத்துக்கான வழக்கு எனவும் கருத்து கூறியது. 
மேலும், தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ad

ad