புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

ஜெ.,வுக்கு ரிச்சர்ட் பாலே, எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை! உடல்நிலையில் முன்னேற்ற


முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.   ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.  இந்நிலையில் 15வது நாளான இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,  முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  முதல்வர் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோவிற்கு வந்துள்ளனர்.  முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களூடன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.   எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் பரிசோதனை செய்தது.  

எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். நாளை வரை எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. 

இங்கிலாந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பாலே இன்று மீண்டும் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.  

முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

ad

ad