புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

நான் எனது கிராமத்தில் மட்டுமே படித்தேன் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்


 பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனை தவிர எனது கிராமத்தில்  வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை
ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவ்வவ் போது கற்றுக்கொள்வேன் என கிளிநொச்சி மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்ற மாணவன் யுகதீபன் நுகாந் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நுகாந் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மாயவனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நுகாந்தின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.தாய் வீட்டுப்பணி, நுகாந் வீட்டுக்கு மூத்த  பையன் அவனுக்கு கீழ் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனா.
வழமை போன்று பாடசாலைக்கு செல்வது அங்கு வகுப்பாசிரியர் தேவராசா நிகேதரனின் கற்பித்தல் மற்றும் அவரால் பாடசாலைகளில் மாலை நான்கு முப்பது மணி வரை நடத்தப்படும் மேலதிக வகுப்பு இதுவே நுகாந்தின் கற்றல். இதனை தவிர தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று கற்றுக்கொள்வது. மேலும் இரவு ஒன்பது மணிவரை படிப்பது. அதனை தவிர பல வேளைகளில் அதிகாலை ஜந்து மணிக்கு எழுந்து கற்பது. இதனை தவிர வேறு எதுவும் இல்லை
இந்த நிலையில் குறித்த மாணவன் இந்த தடவை  மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதிபரின்   ஊக்கமும் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்தழைப்பு என்பன நுகாந்தை சாதிக்க வைத்திருக்கிறது.
தான் வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்ற இலட்சத்தில்  இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
51
52

ad

ad