24 பிப்., 2017

ஜெ. பிறந்தநாளை ஒன்றிணைந்து கொண்டாடிய ஒ.பி.எஸ்., தீபா ஆதரவாளர்கள்


தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னால் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தீபா ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.