24 பிப்., 2017

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

இராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி சுங்கசாவடியில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமான டிஎன் 07 பிக்யூ 8485 என்ற பதிவு எண் கொண்ட காரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதுபற்றி மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்ததில் இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் இராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரிந்தது. இதையடுத்து சென்னையில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.