புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2017

கிளி.பரவிப்பாஞ்சானிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அத ன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணு வத்தினர் உறுதியளித்திருந்தனர். 

அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். 

அத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளி த்துள்ளனர்.

ad

ad