புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2017

மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன்: 21 நிமிடங்களில் சென்னை-பெங்களூரு பயணம்

குழாய் வடிவிலான இயந்திரத்தில் நாம் கற்பனையும் செய்ய முடியாத வேகத்தில் பயணிக்க வழி செய்யும் போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப்
ஒன். எலான் மஸ்க் கற்பனையில் உருவான ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்தை செயல்படுத்த எலான் மஸ்க் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் இரயில் போக்குவரத்தை செயல்படுத்த தகுதி வாய்ந்த ஐந்து வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் ஹைப்பர்லூப் ஒன் இரெயில்வே திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது.
ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் 884 மைல் கொண்ட டெல்லி மற்றும் மும்பை இடையேயான தூரத்தை வெறும் 80 நிமிடங்களில் கடக்க முடியும். இதே போல் நாடு முழுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வழித்தடங்களிலும் மிக குறைந்த வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
ஹைப்பர்லூப் ஒன் கட்டமைக்க தேவையான பாகங்களில் சிலவற்றை உள் நாட்டிலேயே தயாரிக்க முடியும். இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஹைப்பர்லூப் டெக்னாலஜீஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராப் லாய்டு தெரிவித்துள்ளார்.
துவக்கத்தில் சான் பிரான்சிஸ்கோ முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை கட்டமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டார். எனினும் அமெரிக்காவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வெற்றிகரமான இறுதிகட்ட சோதனைகளை தொடர்ந்து இத்திட்டம் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad