5 மார்., 2017


கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
நேற்றும் தொர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
 கிளிநொச்சியில் கிளிநாச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக 13வது நாளான நேற்றைய போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணைக் கறுப்புத் துணியால் கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்புாது தமிழ் அரசியல்வாதிகள் மீதும் இலங்கை அரசையும் அவர்கள் கடுமையாக சாடியிருந்தனர்.
வவுனியாவில் கடந்த 9ஆவது நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமற்போன உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பின் பிரதிநிதிகளின் ஆதரவின்றித் தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தமது பொராட்டம் தோடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.