புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா!


வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு  நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையி ல் இந்நிகழ்வு நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால்
”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்
போட்டியில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்க விடப்பட்டன. வானத்தில் பட்டங்கள் காட்டிய வர்ணஜாலங்கள் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.
பட்டப் போட்டியில் இடம்பெற்ற பட்டங்களில் வெற்றிபெற்ற பட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி போட்டியில் இடம்பெற்ற 68 பட்டங்களில் 1 ஆம் இடத்தினை பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் பெற்றுள்ளது. இப் பட்டத்தினை ஏற்றிய ம.பிரசாந்திற்கு 15 ஆயிரம் ரூபாவும் 1 பவுண் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.இப்பட்டம் மூன்றாவது தடவையாகவும் முதல் பரிசிலினை பெற்று வருகின்றது.
2 ஆம் இடத்தினை அன்னப்படகு பட்டம் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய ம.ஆரோக்கி என்பவருக்கு அரைப்பவுண் தங்கக் காசும் 10 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.
3 ஆம் இடத்தினை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய வெ.ராஜேந்திரன் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாவும், சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

ad

ad