புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்

பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்­­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார்.
பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்­­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார்.

வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் நேற்று முன்­தினம் அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பை சந்­தித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பு குறித்து முதல்­வ­ர், தெரி­விக்­கையில், எதிர்­வரும் மார்ச் மாதம் கூட­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்தும் தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இது குறித்து நான் அவ­ரிடம் கருத்து வின­வி­யி­ருந்தேன். உண்­மையில் எமக்­கான தீர்­வு­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்­துமே இன்று பொய்த்­துக்­கொண்டு உள்­ளன.

ஆகவே அர­சாங்­கத்தின் நகர்­வுகள் குறித்து அமெ­ரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என நான் தெரி­வித்­துள்ளேன். அதே நிலையில் அமெ­ரிக்­காவும் இந்த விவ­கா­ரத்தில் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களில் பின்­வாங்­கு­கின்­றது. எமக்கு இது மிகுந்த அதி­ருப்­தியை வெளி­ப­டுத்­து­வ­தாக அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷப் என்­னிடம் தெரி­வித்தார்,

இந்த ஆண்டு மார்ச் மாதத்­திற்கு முன்னர் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யங்­களில் அர­சாங்கம் நல்­ல­தொரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் என வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தும் அவை இன்றும் வெறும் கதை­க­ளாக கடந்து செல்­கின்­றன. இப்­போது தேர்தல் ஒன்றை எதிர்­பார்த்­துள்ள நிலையில் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் மேலும் தாம­த­மாகும். சில முக்­கிய விட­யங்­களில் தேசிய அர­சாங்கம் பின் நிற்­பது உகந்­த­தல்ல. ஜன­நா­யக ரீதியில் அர­சாங்கம் செயற்­படும் என்ற நம்­பிக்­கைக்கு அமை­யவே ஐக்­கிய அமெ­ரிக்கா இலங்கை அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டவும் பின்­னின்று உதவி செய்­யவும் தீர்­மானம் எடுத்­தது.

அதே­போன்று இந்த அர­சாங்கம் தாமாக முன்­வந்து பல்­வேறு விட­யங்­களில் தீர்­வு­களை கொடுப்­ப­தாக கூறி­யி­ருந்­தது. எனினும் அனைத்­துமே இன்று ஏமாற்றுக் கதை­க­ளாக மாறி­யுள்­ளன. ஆகவே தாம் எதிர்­பார்த்த எவையும் இன்னும் நடை­பெ­ற­வில்லை என அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரி­வித்தார். மேலும் இந்த அர­சாங்­கத்தின் நகர்­வு­களில் திருப்­தி­க­ர­மான செயற்­பா­டுகள் இல்லை. முன்­னைய ஆட்­சியின் கதை­களை கூறிக்­கொண்டும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் கதை­களை கூறிக்­கொண்டும் முன்­னெ­டுக்­க­வேண்­டிய நல்­லெண்ண நகர்­வு­களை புறக்­க­ணித்து வரு­கின்­றனர். தமது கட­மை­களை நிரா­க­ரிக்கும் செயற்­பா­டு­க­ளாக நாம் இவற்றை கரு­து­கின்றோம். இதுவே எமக்­குள்ள மிகப்­பெ­ரிய ஏமாற்­ற­மாகும். ஆகவே அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை விரைவில் நிறை­வேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தாம் இருப்­ப­தா­கவும் என்­னிடம் அமெ­ரிக்க தூதுவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் புதிய பாதீ­டு­க­ளுக்கு அமைய உலக உணவு ஸ்தாபனம் இலங்­கையின் சிறார்­க­ளுக்கு ஒதுக்கும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான மதிய உண­வுக்­கான நிதி உத­வியை இந்த ஆண்டில் ஒதுக்­க­வில்லை. கடந்த மாதத்­துடன் அவை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இந்த செயற்­பாடு எமது மாண­வர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாக உள்­ளது. எமது பிள்­ளைகள் மிகவும் கஷ்­டத்தின் மத்­தியில் பாட­சா­லையில் வழங்கும் உண­வு­களை நம்பி பாட­சா­லை­க­ளுக்கு செல்­கின்­றனர். அரை­வாசி பிள்­ளை­களின் நிலைமை இவ்­வா­றா­கவே உள்­ளது. ஆகவே மதிய உணவு திட்­டமும் கைவி­டப்­பட்டால் எமது பிள்­ளைகள் பாட­சாலை செல்­வதும் வெகு­வாக குறைந்­து­விடும். இதனால் எமது சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் அதி­க­ரிக்கும். ஆகவே நான் இந்த பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்டி கடந்த மாதம் அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­யி­ருந்தேன். இந்த விவ­கா­ரங்கள் குறித்து நேற்­றைய சந்­திப்பில் நான் அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷப்­பிடம் வின­வினேன். எனது கடித்­தத்தை உரிய இடத்­திற்கு அனுப்­பி­ய­தா­கவும் எனது கடித்­தத்தை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

எனினும் கடி­தத்தை ஏற்­று­கொண்ட போதிலும் 2018 ஆம் ஆண்டில் இலங்­கைக்­கான நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை எனவும் இந்த விவ­கா­ரத்தில் தாம் சற்று சிர­மத்தை எதிர்­கொண்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். எனவே எமக்கு இது மிகப்­பெ­ரிய ஏமாற்­றத்தை தருகின்றது. மாதாமாதம் ஏதேனும் வேலைத்திட்டங்கள் ஊடாக எமது மாணவர்களுக்கு உணவுக்கான நிதியினை வழங்க வாய்ப்புகள் உள்ளதா எனவும் நான் வினவினேன். எனினும் தீர்மானங்கள் எதையும் அவர்களால் முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது. ஆகவே மாகாணசபையில் இந்த விவகாரம் குறித்து நான் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். வரும் பிரச்சினைகளையும் நானே சமாளிக்கவும் வேண்டியுள்ளது. இவ்வாறான நகர்வுகளின் மூலமாக எமது மாணவர்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad