புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

எனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது எனக்கு பெரும் மகிழ்ச்சி: பென்னிகுக் பேத்தி


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா  எல்லையான குமுளி பகுதியில்  முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த  அணையை  கட்டிய பென்னிகுயிக் வாரிசுகளான பேரன் பேத்திகளான  டாக்டர்  டயாமாஜிப். ஜெய்ண்ஸி பென்சன். சூசன்பெரோ. சேரன்பிள்ளிங். ஜான்போப். ஜேம்ஸ்எட்வர்ட் உள்பட ஆறு பேர் தனது  தாத்தா பென்னிக் கட்டிய அணையை  பார்ப்பதற்காக  லண்டனில்  இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர். 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் இன்று தேனி வந்தனர். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான்பென்னி குக்கின் பிறந்த நாளை ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதியன்று தேனி மாவட்ட விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜான் பென்னி குக்-ன் மகள் வழிப்பேத்தி டயானா ஜிப் மற்றும் குடும்பத்தினர் ஜெனிமோரா, சூசன் பெரோ, லண்டனில் உள்ள சர்ச் செயலாளர் சரோன் பில்லிங் இந்தியா வந்துள்ளனர். தேனி வந்த அவர்கள், பின் தேக்கடி படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பென்னிகுக் பேத்தி டயானா ஜிப், தமிழக மக்களின் வாழ்வை மாற்றி அமைக்க தனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

ad

ad