புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்த ரயில்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து
இன்று அதிகாலை 5.45. மணியளவில் யாழ். நோக்கிப் புறப்பட்ட அதிவேக சொகுசு ரயிலிலேயே, இத்தீவிபத்து ஏற்பட்டது
குறித்த ரயில் யாழ். மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் பின்பகுதியில் உள்ள இயந்திரப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் பஸ்களில் தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு தீ அணைப்பு படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு சீராக்கப்பட்டதையடுத்து, ரயில் மீண்டும் யாழ். நோக்கிப் பயணித்தது.
   
   Bookmark and Share Seithy.com

ad

ad