பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது அரசாங்கத்தின் நிதி தொடர்பான விடயமாகும். இதில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புண்டு என்றும் கூறியுள்ளார்.
இது பொதுமக்களின் சொத்தாகும். இதில் பொதுமக்களுக்கும் உரிமையுண்டு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றில் ஐ.தே.கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி சபையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சபை அமர்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது