புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2018

வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! - விக்னேஸ்வரன் கோரிக்கை

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கோரி­யுள்ளார்.
வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கோரி­யுள்ளார்.
bn
வடக்கின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மற்றும் வாழ்­வா­தார நகர்­வு­களை கையாள்­வது குறித்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் நேற்று பேச்­சு­ இடம்­பெற்­றது. தூத­ர­கத்தில் நடை­பெற்ற இந்தப் பேச்­சு­வார்த்­தையில் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவ­சியம் குறித்து முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யதை அடுத்து அந்த விடயம் தொடர்பில் மத்­திய அர­சாங்­கத்தின் இணக்­கப்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தாக உயர்ஸ்­தா­னிகர் முத­ல­மைச்­ச­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

இந்தச் சந்­திப்புத் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கேச­ரிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், இந்­திய அர­சாங்­கத்­துடன் ஏற்­க­னவே வட­மா­காண சபை சார்பில் நாம் நீண்­ட­கால பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இதில் ஒரு கட்­ட­மா­கவே நேற்றும் நான் இந்­திய உயர்ஸ்­தா­னி­கரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் வடக்கின் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இரு­நாட்டு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்து வின­வினேன். காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி மற்றும் பலாலி விமா­ன­நி­லை­யத்தின் அபி­வி­ருத்­திகள் குறித்து ஆரம்­பத்தில் இருந்தே இந்­திய அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு நாம் கொண்­டு­ வந்­துள்ளோம். ஆகவே அவற்றை கையாள்­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. மேலும் தூத்­துக்­குடி, -தலை­மன்னார் இடை­யி­லான கப்பல் சேவை­யினை முன்­னெ­டுப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஆகவே இந்த நகர்­வுகள் குறித்து பரி­சீ­லனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் வட­மா­கா­ணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்­பது குறித்து ஆரம்­பத்தில் இருந்து கலந்­து­ரை­யா­டப்­பட்டு வந்த நிலையில் எவ்­வா­றான வீடுகள் அமைப்­பது என்­பது குறித்த சில சிக்கல் நிலை­மைகள் காணப்­பட்­டன. பரி­சீ­லனை செயற்­பா­டு­களும் கையா­ளப்­பட்­டன. இப்­போது அவை குறித்து ஒரு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான நிதி ஒதுக்­கீ­டுகள் குறித்து பேசி­யி­ருந்தோம். வீடு­களை அமைப்­பது குறித்த அவர்­களின் தீர்­மா­னத்தை விரைவில் தெரி­விப்­ப­தாக அவர்கள் குறிப்­பிட்­டனர். மேலும் வீட்டுத் திட்டம் அமைப்­பது குறித்து மத்­திய அர­சாங்­கத்­துடன் இந்­திய அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் எனவும் உயர்ஸ்­தா­னிகர் தெரி­வித்தார்.

அத்­துடன் யாழ்ப்­பாணம் நகர மண்­டப புன­ர­மைப்­பு­க­ளுக்­காக 800 மில்­லியன் ரூபா நிதியை இந்­தி­யா­விடம் இருந்து கோரி­யி­ருந்தோம். அது குறித்தும் ஆரா­யப்­பட்­ட­துடன் மயி­லிட்டி மீன்­பிடி துறை­முக புன­ர­மைப்பு குறித்து இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலும் அத­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கான பாது­காப்­புகள் குறித்தும் நாம் இதன்­போது பேசி­யி­ருந்தோம். வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­கா­ரத்தில் ஆழமான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் வடக்கின் நகர்வுகள் குறித்து மத்திய அரசாங்கத்தின் அனுமதிகள் மற்றும் ஒத்துழைப்பும் அவசியம். ஆகவே இவை குறித்து பேசுவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மீண்டும் நாம் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad