புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2018

பிரபாகரனின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்-பிரசன்னா இந்திரகுமார்

பிரபாகரனின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடைய மக்கள் தேசியத்திற்காக தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தவர்கள் என்ற ரீதியில் எந்த தேர்தலாக இருந்தாலும் அவர்கள் த.தே.கூட்டமைப்புடன் இருக்கின்றனர் என்பதை சர்வதேசத்திற்கும், தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சாதாரணமாக நான்கு கட்சிகளின் தலைவர்கள் கூடி கலந்துரையாடி உருவாக்கப்பட்டதல்ல. தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரனின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதாகும்.
அவருடைய காலகட்டத்தில் இந்த நாட்டினுடைய போராளிகள் தமிழ் மக்களுக்கு உந்துசக்தியாக இருந்து நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்க பழக்கப்படுத்தினார்களோ அவ்வாறுதான் இன்றும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்றார்கள்.
2000ஆம் ஆண்டு, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஊக்குவிக்கப்பட்ட மக்களின் வாக்களிக்கும் சக்தி தான் அதனூடாக நாங்கள் இன்று தமிழ் மக்களின் நியாயபூர்வமான கொள்கைக்காக அவர்களிடம் வாக்குகளை கேட்கின்றோம்.
போராளிகள் பொதுமக்களின் தியாகங்களை தமிழ் மக்கள் விட்டுச்செல்லமுடியாது. இந்தவேளையில்தான் சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர்களின் பலத்தினை காட்டவேண்டிய நிலையிருக்கின்றது.
தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பலத்தினை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து யாரும் பிரிந்து செல்வதற்கு தமிழ் மக்கள் அனுமதிக்ககூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad